TamilPP-இன் அதிகாரப்பூர்வ ஆவணங்களுக்கு வரவேற்கிறோம்! பைதான் (Python) நிரலாக்கத்தை நமது தாய்மொழியான தமிழிலோ அல்லது ஆங்கிலம் கலந்த தமிழிலோ (Tanglish) எழுத இது உங்களை அனுமதிக்கிறது. புதிய நிரலாளர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
TamilPP தொகுப்பை பைத்தானின் அதிகாரப்பூர்வ PyPI தளத்தில் இருந்து நேரடியாக உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளலாம்.
pip install tamilpp
tamilpp தொகுப்பை (Package) எளிதாக நிறுவிக் கொள்ளலாம். நிறுவப்பட்ட பின், உங்கள் பைதான் திட்டங்களில் தமிழிலேயே நிரல்களை எழுதத் தொடங்கலாம்!tamilpp package directly from PyPI.
உங்கள் நிரலை எழுதி முடித்த பின், அதனை .tpp என்ற நீட்டிப்புடன் (உதாரணமாக: main.tpp) சேமிக்க வேண்டும். பின்னர் முனையத்தில் (Command Prompt) கீழ்க்கண்ட கட்டளைகளைப் பயன்படுத்தலாம்.
tamilpp main.tpp
main.tpp என்ற உங்கள் தமிழ் நிரலை நேரடியாக இயக்கி, அதற்கான விடையைத் திரையில் காட்டும். (main.tpp என்பதற்குப் பதிலாக உங்கள் கோப்பின் பெயரைக் கொடுக்கவும்).tamilpp command followed by your filename to directly execute your code and see the output immediately.
tamilppc main.tpp
.py கோப்பாகச் சேமிக்கும். பைத்தான் மட்டுமே தெரிந்தவர்களுடன் உங்கள் நிரலைப் பகிர இது உதவும்.tamilppc command compiles your Tamil code and converts it into standard Python code so it can be run anywhere.
பயனரிடமிருந்து தகவலைப் பெறவும், திரையில் காட்டவும் இந்த வார்த்தைகள் பயன்படுகின்றன.
| Tamil | Tanglish | Python Equivalent |
|---|---|---|
| பதி | pathi / padi | |
| உள்ளிடு | ullidu | input |
பெயர் = உள்ளிடு("உங்கள் பெயர்: ") பதி("வணக்கம்", பெயர்)
உள்ளிடு (input) பயனரிடமிருந்து தகவலைப் பெறுகிறது. பதி (print) விடையைத் திரையில் காட்டுகிறது.
name = ullidu("Peyar: ") padi("Vanakkam", name)
ullidu gets input from the user. padi displays the result on the screen.
ஒரு குறிப்பிட்ட நிபந்தனை உண்மையா அல்லது பொய்யா என்பதைப் பொறுத்து முடிவுகளை எடுக்க இவை உதவுகின்றன.
| Tamil | Tanglish | Python Equivalent |
|---|---|---|
| எனில் | enil | if |
| ஆனால் | aanaal | elif |
| இல்லை | illai | else |
மதிப்பெண் = 85 எனில் மதிப்பெண் > 80: பதி("சிறப்பு!") ஆனால் மதிப்பெண் > 35: பதி("தேர்ச்சி") இல்லை: பதி("தோல்வி")
எனில் (if) முதல் நிபந்தனையைச் சரிபார்க்கும். அது தவறென்றால் ஆனால் (elif) அடுத்ததைச் சரிபார்க்கும். இரண்டுமே தவறென்றால் இல்லை (else) வேலை செய்யும்.
mark = 85 enil mark > 80: padi("Super!") aanaal mark > 35: padi("Pass") illai: padi("Fail")
enil checks the first condition, aanaal checks the next, and illai runs if all conditions fail.
ஒரு குறிப்பிட்ட செயலைத் திரும்பத் திரும்பச் செய்ய சுழல்கள் பயன்படுகின்றன.
| Tamil | Tanglish | Python Equivalent |
|---|---|---|
| சுற்று / வீச்சு / இல் | sutru / veechu / il | for / range / in |
| வரை | varai | while |
| நிறுத்து / தொடர் | niruthu / thodar | break / continue |
# 3 முறை சுழலும் சுற்று எண் இல் வீச்சு(3): பதி(எண்)
வீச்சு (range) குறிப்பிட்ட எண்கள் வரை பட்டியலை உருவாக்கும். சுற்று (for) மற்றும் இல் (in) அதனைத் திரும்பத் திரும்ப இயக்கும்.
# 5 வரும் வரை ஓடும் x = 0 varai x < 5: enil x == 3: niruthu padi(x) x = x + 1
varai runs as long as the condition is true. niruthu (break) forcefully stops the loop when x is 3.
பல நிபந்தனைகளை ஒன்றாக இணைக்க மற்றும் உண்மையை/பொய்யை மதிப்பிடப் பயன்படுகின்றன.
| Tamil | Tanglish | Python Equivalent |
|---|---|---|
| மற்றும் / அல்லது / அல்ல | matrum / allathu / alla | and / or / not |
| உண்மை / பொய் / ஏதுமில்லை | unmai / poi / ethumillai | True / False / None |
மழை = உண்மை குடை = ஏதுமில்லை எனில் மழை மற்றும் அல்ல குடை: பதி("நனைவீர்கள்!")
உண்மை (True) நடந்ததைக் குறிக்கும். ஏதுமில்லை (None) என்பது காலியான மதிப்பைக் குறிக்கும். மற்றும் (and) இரண்டையும் சரிபார்க்கும், அல்ல (not) எதிர்ப்பதைக் குறிக்கும்.
mazhai = unmai kudai = ethumillai enil mazhai matrum alla kudai: padi("Nanaiveergal!")
matrum (and) / alla (not). ethumillai means an empty/None value.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய குறியீடுகளையும், பொருள் சார்ந்த நிரலாக்கத்தையும் (OOP) உருவாக்க இவை உதவுகின்றன.
| Tamil | Tanglish | Python Equivalent |
|---|---|---|
| செயல் / திருப்பு | seyal / thiruppu | def / return |
| வகுப்பு | vaguppu | class |
வகுப்பு கார்: செயல் ஓட்டு(self): திருப்பு "கார் ஓடுகிறது" என்_கார் = கார்() பதி(என்_கார்.ஓட்டு())
வகுப்பு (class) மூலம் புதிய பொருள்களை உருவாக்கலாம். செயல் (def) ஒரு வேலையைச் செய்கிறது, திருப்பு (return) விடையை திருப்பி அனுப்புகிறது.
vaguppu Car: seyal ottu(self): thiruppu "Car oduthu" my_car = Car() padi(my_car.ottu())
vaguppu to create objects. seyal defines a function, and thiruppu returns the output.
எண்கள், எழுத்துகள் மற்றும் அவற்றின் நீளத்தைக் கண்டறியப் பயன்படும் வார்த்தைகள்.
| Tamil | Tanglish | Python Equivalent |
|---|---|---|
| முழுஎண் / தசமம் | muzhuen / thasamam | int / float |
| சரம் / பட்டியல் / அகராதி | saram / pattiyal / agaraathi | str / list / dict |
| நீளம் | neelam | len |
எண் = முழுஎண்(10) பெயர்கள் = பட்டியல்(["கமல்", "ரஜினி"]) பதி("பட்டியலின் நீளம்:", நீளம்(பெயர்கள்))
முழுஎண், சரம், பட்டியல் ஆகியவை தரவுகளின் வகைகளாகும். நீளம் (len) என்பது பட்டியலில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைத் தரும் (இங்கே விடை 2).
num = muzhuen(10) names = pattiyal(["Kamal", "Rajini"]) padi("Length is:", neelam(names))
muzhuen (int) or pattiyal (list). Use neelam (len) to find the size of an object.
வெளிப்புற குறியீடுகளை (Libraries) உங்கள் கோப்பில் இணைக்க இவை பயன்படும்.
| Tamil | Tanglish | Python Equivalent |
|---|---|---|
| இறக்குமதி | irakkumathi | import |
இறக்குமதி கணிதம் விடை = கணிதம்.sqrt(16) பதி(விடை) # விடை 4.0
இறக்குமதி (import) மூலம் பைத்தானில் உள்ள பிற கோப்புகளையோ அல்லது லைப்ரரிகளையோ நம் நிரலுக்குள் கொண்டுவரலாம்.
irakkumathi math ans = math.sqrt(16) padi(ans) # ans 4.0
irakkumathi is used to import built-in or external python modules like math, random, etc.